Wednesday, July 3, 2013

புத்தகத்துக்கான தடையை விமர்சித்து எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்

28 ஜூன் 2013 அன்று லயோலா கல்லூரியில் நடந்த கண்டன கூட்டத்தில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் கலந்து கொண்ட பிறகு, முக நூலில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்து


==========
கு. செந்தில் மள்ளரின் ‘ மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ நூலை தமிழக அரசு தடை செய்து அவரை கைது செய்திருப்பதன் மூலம் விஸ்வரூபத்திற்குப் பிறகு இன்னொரு பாக்ஸ் ஆஃபிச் ஹிட்டைக் கொடுக்க ஜெயலலிதா அரசு தயாராகிவிட்டது.

அரசாங்கங்கள் புத்த்கங்களைப் படிக்கத் தொடங்குவது நல்லதல்ல. இந்தத் தடையை அறிவார்ந்த சமூகம் ஓன்றுபட்டு எதிர்கவேண்டும். அதே சமயம் புத்த்கத்தில் பிற சமூகங்களைப் பற்றிய சில குறிப்புகள் மிகையானவை. இதுபோன்ற ஆய்வுகளில் இத்த்கைய வசவுகளைச் சேர்ப்பது இந்த ஆய்வுகளை அழிக்க விரும்பிகிறவர்களுக்கே உதவி செய்யும்.

தலித் என்ற சொல்லைப் பார்த்து பயப்படாதவர்கள் தேவேந்திர குல வேளாளர் என்ற சொல்லைப் பார்த்து பதட்டமடைவது ஏன்? அது சாதிய படிநிலை மனோபாவத்தை தாக்குகிறது என்பதாலா?
யார் யாரோ ஆண்ட பரம்பரை என்று அறிவித்துக்கொண்ட போது கூலாக இருந்த அரசு பள்ளர்கள் தன்னை ஆண்ட பரம்பரை என்று வாதாடத் தொடங்கியதும் அதை ஒடுக்க ஏன் இவ்வளவு வேகமாக வேலை செய்கிறது. அப்படியெனில் சாதி வெறி இன்றைய அரசதிகாரத்தோடு அவ்வளவு வெளிப்படையாக கலந்துவிட்டதா?

பள்ளர்கள் தங்கள் சாதிய மேன்மையை வரலாற்று ரீதியாக நிறுவும்போது சாதிய சமூகமான தமிழ்சமூகத்தில் எப்படி இந்த கருத்தோட்டத்தையும் தமிழ்தேசிய கருத்தோட்டத்தையும் ஒன்றிணைப்பார்கள்? பள்ளர்களின் வரலாற்று மேலாதிக்கத்தை நாடார்களோ தேவர்களோ கோனார்களோ ஆசாரிகளோ ஏற்பார்களா?
இந்த பள்ளர் வரலாற்று எழுச்சியில் பறையர்கள், சக்கிலியர்கள் இடம் என்ன?

இதெல்லாம் நூலுக்கான தடையைக் கண்டித்த்து லயோலா கல்லூரியில் நடந்த இன்றைய கூட்டத்தில் என் பேச்சிலும் பேச்சின் ஊடே மனதிலும் அலைமோதிய எண்ணங்கள்.

==========

No comments:

Post a Comment