Wednesday, July 3, 2013

'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' மீதான தடையை விளக்க கோரி மனு: தின மணி




"தமிழக அரசால் தடை செய்யப்பட்ட "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற நூலை மறுபரிசீலனை செய்து தடையை விலக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில், கோவை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், நிகண்டுகள், ஆய்வு அறிஞர்களின் நூல்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற குடிமையியல் மரபு ஆய்வு நூலை, தமிழக அரசு தடை செய்துள்ளது.
மேலும், நூலாசிரியர் கு.செந்தில் மள்ளரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருப்பது வரலாற்று ஆசிரியர்களையும், ஆய்வாளர்களையும், எழுத்தாளர்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற வரலாற்று ஆய்வு நூலுக்கு தடை விதித்திருப்பதை மறுபரிசீலனை செய்து தடையை விலக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment